ETV Bharat / state

எல்லா மக்களுக்கும் எல்லாம்... கொள்கையை நிறைவேற்றுவோம் - ஐ. பெரியசாமி - latest news

திண்டுக்கல்: கரோனா இரண்டாம் தவணை நிதி, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்வை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கிவைத்தார்.

எல்லா மக்களுக்கும்...எல்லாம்! கொள்கையை நிறைவேற்றுவோம்

author img

By

Published : Jun 16, 2021, 11:09 AM IST

Updated : Jun 16, 2021, 11:14 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண நிதி வழங்கும் விழாவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,000 வழங்கினார்.

கரோனா நிவாரண நிதி வழங்கும் விழா

மேலும் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, சர்க்கரை, ரவை, உளுத்தம் பருப்பு, புளி, கடலைப்பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், குளியல் சோப், துவைக்கும் சோப் உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு கடன் வழங்கப்படும்.

கன்னிவாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். கன்னி வாடி பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாகத் திகழும் நாயோடை அணை தூர்வாரி புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ரெட்டியார் சத்திரம் புதுக்கோட்டை வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு ரூ.2,000 மட்டும் 14 ரேசன் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!

Last Updated : Jun 16, 2021, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.