திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்து பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 868 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்த விழாவில் மொத்தம் பத்து பள்ளிகளைச் சேர்ந்த 961 மாணவர்கள் மற்றும் 1907 மாணவிகள் என மொத்தம் 2,868 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.113 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 771 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது எனக் கூறினார்
இதையும் படிங்க: கைக்குழந்தையின் முன் தாய் தூக்கு மாட்டி தற்கொலை