திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச் சாவடி பகுதியில் நேற்று (செப்டம்பர் 1) இரவு பலத்த மழை பெய்தது. அப்போது இளைஞர் ஒருவர் சுங்கச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் செல்லாமல் தவறுதலாக பாஸ்ட்ராக் பாதையில் சென்றுள்ளார்.
இதைக்கண்ட டோல்கேட் ஊழியர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழியாக ஏன் வந்தாய் என கூறி தாக்கியுள்ளனர். அதற்கு அந்த இளைஞர் மழை பெய்வதால் இந்த வழியில் வந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே மழை வேளையில் தவறுதலாக மாற்றுப்பாதையில் வந்த இளைஞரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கடுமையாக நடந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இருசக்கர வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் - சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல்
திண்டுக்கல்: பாஸ்ட்ராக் வழியாக செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.