திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது மகனிடம் பேசுவதற்காக மொபைல் போனை இளைய சகோதரரியிடம் கேட்டுள்ளார். மொபைல் போன் கொடுக்க மறுத்த சகோதரியை வீட்டில் இருக்கும் அருவாள்மனையால் அக்காவே வெட்டிக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றதாகவும் நடந்த கொலை சம்பவம் விபத்து எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து அரசு தரப்பில், இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டது உறுதிபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோவையில் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு