இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நேற்று (ஜூன் 5) நிகழ்ந்தது. இரவு 11.00 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் இன்று அதிகாலை 2.30 மணி வரை நிகழ்ந்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த அழகிய நிகழ்வு கொடைக்கானலில் தெளிவாகத் தெரிந்தது. இதனைக் கண்ணாடி ஏதுமின்றி மக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர்.
கிரகணம் ஏற்பட்டபோது சந்திரன் ஆரஞ்ச் நிறத்தில் காட்சியளித்ததால், அதற்கு ஸ்ட்ராபெரி நிலவு எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சந்திர கிரகணம் நடைபெறும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திர கிரகணம் என்பது முழு நிலவு வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் ஏற்படும். இந்த நிகழ்வு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது கிரகணம் ஏற்படும்.