திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர்கள், 232 ஒன்றிய கவுன்சிலர்கள், 306 ஊராட்சித் தலைவர்கள், 2,772 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,333 பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவிருக்கிறது.
இந்தப் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவு பெற்றது. மொத்தம் 11 ஆயிரத்து 929 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 113 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 948 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 685 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கென நேற்று முன்தினம் மட்டும் 4 ஆயிரத்து 977 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் மனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் ஒன்றியங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள், முன்மொழிந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த ஒன்றியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வருகிற 19ஆம் தேதி வேட்பாளருக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: 'யூ டியூப்பில் விளம்பரம் பார்த்தால் பணம்' - நூதன மோசடியில் ஈடுபட்ட பி.இ., பட்டதாரிகள் கைது!