தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து கொடைக்கானலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சில கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
தமிழ்நாடு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த மக்கள், வாழ்வாதார மீட்பு குழு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுவர்கள் உள்பட 7 கொத்தடிமைகள் மீட்பு!