தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நோய் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவற்றை மீறி இன்று தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 160 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான கடைகளில் குறைந்த விலையிலான மதுபானங்கள் இருப்பு வைக்கப்படவில்லை. உயர்ரக விலையில் அதிகமான மது வகைகள் மட்டுமே மிகக் குறைந்த அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனால் மதுவாங்க வந்த மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சில இடங்களில் மதுக்கடைகளுக்கு சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து மதுபான வகைகளை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். பல்வேறு இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தவிர்க்க காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.