ETV Bharat / state

கொடைக்கானலில் மதுபான காலிப்பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை: கொந்தளித்த குடிமகன்கள்!

author img

By

Published : Jun 15, 2022, 4:24 PM IST

கொடைக்கானலில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது; காலிப்பாட்டில்களை திரும்பக் கொடுத்தால் பத்து ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்று நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் இன்று அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

கொடைக்கானலில் மதுபானம் காலி பாட்டில் திரும்பப்பெறும் நடைமுறை மக்கள் கருத்து

திண்டுக்கல்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று(ஜூன் 15) முதல் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனையாகும் மது பாட்டில்களை திரும்ப அதே கடைகளில் கொடுத்து பத்து ரூபாய் திரும்பப் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஒவ்வொரு பாட்டில்களிலும் பத்து ரூபாய் திரும்பப் பெறுவதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாட்டிலிலும் பத்து ரூபாய் திரும்பப் பெறுவதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை திண்டுக்கல் மாவட்ட மதுபானக் கூட கிட்டங்கி மேலாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஒருபுறம் இந்த நடைமுறை வரவேற்பைப் பெற்று இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர் தாங்கள் மது வாங்கும் பகுதிக்கும்; தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கும் பல கிலோமீட்டர் தொலைவு இருப்பதால், கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப மீண்டும் அதே கடைக்கு வந்து பெற்றுக்கொள்வது என்பது மிகவும் சிரமத்திற்கு உரியது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏற்கெனவே அரசு மதுபானங்கள் கூடுதல் விலையில் உள்ளதால் அதன் பின்னரும் 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து பாட்டில்களை திரும்பக்கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்பது ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த நடைமுறை எவ்வகையில் சாத்தியமாகும் என்பது காலம் கடந்த பின்பே தெரிய வரும் என்பது சமூக ஆர்வலரின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவின் ஒற்றைத்தலைமை யாருக்கு? - ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.