திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு பகுதிகளில் 108 நடமாடும் ஆம்புலன்ஸ் சேவையை வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பரமசிவம் பேசுகையில், "2 ஆயிரம் அம்மா மருந்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தினால், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஏழு எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை மாறியுள்ளது. ஏனெனில் மக்களின் சிரமத்தை மாற்றுவதற்காகவே முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் மூன்று கிலோமீட்டருக்கு ஒரு துணை சுகாதார நிலையம் கொண்டு வந்தது முதலமைச்சர் பழனிசாமிதான். மருத்துவ சேவைகளில் பல்வேறு முன்னோடி திட்டத்தை ஜெயலலிதாவின் அரசே அறிமுகம் செய்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயலை எதிர்கொள்ள ஆம்புலன்ஸ்கள் தயார் - விஜயபாஸ்கர்