திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஆடலூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசித்துவந்த மாலதி(32), கணவரைப் பிரிந்து 5 வருடங்களாக தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆடலூரிலிருந்து அருகிலுள்ள கேசி பட்டி கிராமத்திற்கு குடிபெயர்ந்த அவர், அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவரைக் காதலித்துள்ளார்.
இதையடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த அவருக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், சதீஷுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இதையறிந்த மாலதி சதீஷ் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த மாலதி கேசிபட்டி கிராமத்துச் சாலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சதீஷை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபான கடையில் பூட்டை உடைத்து திருடிய இளைஞர் கைது!