ETV Bharat / state

கொடைக்கானலில் வலம் வரும் காட்டு யானைகள்.. கடைகள் சூறையாடல்! அச்சத்தில் பொதுமக்கள்! சுற்றுலா பயணிகளுக்கு தடை! - kodaikanal elephant video

kodaikanal elephant video: கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள கடைகளை துவம்சம் செய்தன. பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 11:19 AM IST

Updated : Oct 9, 2023, 2:10 PM IST

கொடைக்கானலில் வலம் வரும் காட்டு யானைகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இந்நிலையில், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தொடர்ந்து கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்து கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி இருந்தது.

இதனால், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வியாபாரிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, கடைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் பேரிஜம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சுற்றுலா இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மோயர் சதுக்கம் பகுதியில் காட்டு யானை கடை ஒன்றை சேதப்படுத்தி உள்ளது. இதனால், அப்பகுதியில் கடை வைத்து இருக்கும் நபர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, யானை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: சோலோவாக உலா வரும் ஒற்றைக் காட்டு யானை..! பீதியில் மக்கள்!

இதனிடையே, கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் நிலவுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு செல்ல எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத்துறையின் சிறப்பு அனுமதி வாங்கி செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி உள்ளது.

தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி யானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையானது தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் இன்றுடன் எட்டு நாள் ஆகியும் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும், யானையை வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோயர் சதுக்கம் பகுதியில் கடைகளை யானைகள் சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்து: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தகனம்!

Last Updated : Oct 9, 2023, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.