திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதி மட்டுமின்றி நகர், கிராம பகுதிகளில் ஆபத்தான வகையில் மரங்கள் அமைந்துள்ளன. கொடைக்கானலில் காலநிலை மாற்றத்தினால் மரங்கள் காய்ந்து விழும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில், பலத்த காற்று வீசுவதால் மரத்தின் கிளைகள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் திடீரென ராட்சச மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெரும் சேதம் ஏற்படுவதுடன் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் மின்சார சேவையும் முற்றுலும் பாதிப்படைகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பால்வளத்துறை திட்டங்கள் - முதலமைச்சர் ஆலோசனை