ETV Bharat / state

கொடைக்கானல் அருகே அதிசய ராட்சச சிலந்தி வலை - Kodaikanal news

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே உருவாகியுள்ள அதிசய ராட்சச சிலந்தி வலையை மக்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

கொடைக்கானல் அருகே அதிசய ராட்சச சிலந்தி வலை

author img

By

Published : Jun 9, 2021, 10:48 PM IST

Updated : Jun 9, 2021, 10:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே குப்பம்மாள்பட்டி கிராமத்திலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் ராட்சச சிலந்தி வலை ஒன்று பின்னப்பட்டுள்ளது. இந்த வலை இரண்டு மரங்களை இணைத்து பின்னப்பட்டிருக்கிறது.

2011ஆம் ஆண்டின் கணக்கின்படி உலகத்தில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாகத் தெரிகிறது. இதில் கொடைக்கானலில் 40க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராட்சச வலை

தமிழ்நாட்டில் போக்குவரத்து முழுவதுமாகவே தற்போது துண்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தப் போக்குவரத்து துண்டிப்பு காரணமாக மலைச்சாலைகளில் இருக்கக்கூடிய இருபுறங்களிலும் வனப் பகுதிகள் தற்போது பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றன.

ஒட்டன்சத்திரம் மலை சாலையில் இவ்வலை

இந்நிலையில், கொடைக்கானலிலிருந்து கேசி பட்டி வழியாக ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய மலை சாலையில் இந்த சிலந்தி வலை தற்போது தனித்து காணப்படுகிறது.

சராசரியாக 30 அடிக்கு மேல் உள்ள இந்த சிலந்தி வலை, மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சிலந்தி வலைகள் பொதுவாக வெளிநாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க கண்டங்களில் இருக்கக் கூடியவை. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் இதுமுதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மக்கள் இதனை அதிசயித்துப் பார்த்து வருகின்றனர்.

Last Updated : Jun 9, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.