திண்டுக்கல்: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது, கொடைக்கானல். இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். பொதுவாக கொடைக்கானலில் ஏப்ரல் முதல் மே, ஜூன் ஆகிய மாதங்கள் வரை சீசன் தொடங்கும் காலமாகும். சீசன் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும் .
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் சீசன் களையிழந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கரோனா தாக்கம் குறைந்த நிலையில் கொடைக்கானலுக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக்காணப்படுகிறது . கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயின்ட் , குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை, பசுமைப்பள்ளத்தாக்கு, நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.
தொடர்ந்து முக்கிய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:கர்நாடகா : 'சிவமணி' என மகனுக்கு பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!