திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள வட்டகானலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகைபுரிகின்றனர். குறிப்பாக, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் ஜனவரி மாதம் முடியும்வரை வட்டகானல் பகுதியில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானல், கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் நக்சல்கள் ஊடுருவல் இருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்திரவின்பேரில் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவினர் 10 பேர் கொண்ட குழு டால்பின் நோஸ், வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் வெள்ளகெவி மலை கிராமத்தில் உள்ள மக்களிடம் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் நக்சல் தடுப்பு பிரிவினர் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: நக்சல்கள் குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர் காயம்!