குளு குளு குடில்
நாகை மாவட்டம் சீர்காழிப் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தங்குவதற்காக அறைகள் தேடியபோது அவர்களை அணுகிய நபர் ஒருவர் தன்னிடம் குறைந்த விலையில் அறைகள் வாடகைக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர்களை நகரையடுத்துள்ள அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியில் உள்ள குறைந்த விலையிலான குளு குளு குடிலுக்கு (காட்டேஜ்) அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற பிரேம்குமார், பின்னர் கொடைக்கானல் காவலர்களிடம் தான் தங்கியிருந்த குடிலில் இளம்பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்று புகார் அளித்துள்ளார்
6 இளம்பெண்கள்
இதனடிப்படையில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மோகன் ராஜா (40) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், வடமாநிலங்களைச் சேர்ந்த ஆறு இளம்பெண்கள் அந்தக் குளு குளு குடிலில் இருப்பதும் அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
மகளிர் நலவாழ்வு மையம்
இதனையடுத்து அவரைக் கைதுசெய்த காவலர்கள், அங்கிருந்த வடமாநிலங்களைச் சேர்ந்த ஆறு இளம்பெண்களை மீட்டு மகளிர் நலவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்திய கார், நான்கு செல்போன்களையும் கைப்பற்றி, தப்பியோடிய திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன், நாயுடுபுரத்தைச் சேரந்த கோசலை ராமன் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞர் - போக்சோவில் கைது!