திண்டுக்கல்: வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விவசாயிகளும் விவசாய பொருள்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்து வரும் சூழலில் தற்போது வில்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தின் ஆபத்தை உணர்ந்தும், கிராம மக்கள் ஆற்றை ஆபத்தான முறையில் உயிரைப் பணயம் வைத்து தினமும் கடந்து வருகின்றனர். இதனால் அவசர தேவைக்குக் கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலத்தில் விரிசல்: வடிகால் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை