நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காய்கறி, மளிகை பொருள்கள், மருத்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இன்சுலின் போன்ற மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தனியார் மருந்துக் கடைகளுக்கு மருந்துகள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வரக்கூடிய அனைத்து மருந்துகளும் போதுமான அளவு வந்துவிட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய மருந்துகள் வந்து சேர்வதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், சாக்கரை நோயாளிகள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இன்சூலின், இதய நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு இல்லாமல் குறைந்த அளவிலேயே உள்ளன.
எனவே மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னர் மருந்தகங்களுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என மருந்தக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தடையை மீறி கடையை திறந்த உரிமையாளர்கள்: சீல் வைத்த அலுவலர்கள்!