திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கொடைக்கானல் கீழ் மலைக் கிராமங்களான வில் பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளும்; கொடைக்கானல் நகர்ப் பகுதிகளான பாம்பார்புரம், நாயுடுபுரம், செண்பகனூர், மூஞ்சிக்கல் ஆகியப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகச்சைக்காக வருகின்றனர்.
கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும்பாலும் இந்த மருத்துவமனையை தான் பயன்படுத்துகின்றனர். தற்போது மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதி, வெளி நுழைவாய் வளாகம் சுகாதாரமற்ற முறையில் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த மருத்துவமனையில் பணியாளர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர்.
மேலும் சிகிச்சை அளிக்கத் தேவையான முக்கிய உபகரணங்கள் பல செயல்படாமல் இருப்பதால், சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே நோயாளிகள், பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படாத வகையில் மருத்துவமனை வளாகத்தை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: பல்லி விழுந்த தேநீர் விற்பனை - சிறுவன் உட்பட 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!