திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகவுஞ்சி வனப்பகுதியில் இன்று (பிப்.24) மாலை காட்டு தீ ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மரங்கள், புதர்கள் ஆகியவை தீயில் எரிந்து கருகி வருகின்றன.
இதனால் அங்கு புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. கோடை காலம் ஆரம்பித்த நிலையில், வனப்பகுதியில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் தனியார் பருத்தி கிட்டங்கியில் தீ விபத்து!