திண்டுக்கல்: கொடைக்கானல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகின்றன.
இந்த வனப்பகுதிகளில் குரங்கு, காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்டப் பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.
பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் அவல நிலை
வனப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியே வரும் வன விலங்குகள் பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் அவல நிலை நீடித்துவருகிறது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக கொடைக்கானல் வனத்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வனவிலங்களைப் பாதுகாக்க வனப்பகுதிகளுக்குள் அவற்றுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்துதர வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் தடையை மீறி ஆயில் மசாஜ், போதைக் குளியல்: கண்டுகொள்ளுமா காவல் துறை?