திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இ-பாஸ் பெற்று வெளி மாவட்டம், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி கொடைக்கானலில் குளிர்ந்த சீதோஷண சூழ்நிலையும் நிலவுகிறது. இதனால் வட்டக்கானல் அருவியில் குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளை, பயணிகள் கண்டு ரசித்தும், செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகளும் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...இன்று மகனுக்கு பயிற்சியாளர்; நாளை தமிழ்நாட்டின் போட்டியாளர்!