ETV Bharat / state

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு! பெண் கைதான நிலையில் 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! - Fake document scam

Fake document scam: கொடைக்கானலில் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய ஓய்வு பெற்ற சார் பதிவாளர், வழக்கறிஞர்கள் உள்பட 10 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 11:56 AM IST

திண்டுக்கல் : பெயர் ஒற்றுமையை கொண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை மோசடி செய்த வழக்கில் பெண்ணை கைது செய்த போலீசார் மேலும் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவரிடமிருந்து கடந்த 1968 ஆம் ஆண்டில் விருதுநகரை சேர்ந்த சுந்தரலிங்க ஐயர் மகன் சந்திரசேகர் என்பவரும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சங்கர் என்பவரும் இணைந்து கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளனர்.

இந்நிலையில், நிலத்தில் தனது பாகமான 97 சென்ட் நிலத்தை கொடைக்கானலை சேர்ந்த லிஸ்மா உர்மிஸ் என்பவருக்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்து விட்டு பத்திரம் பதிந்து தருவதில் லிஸ்மா உர்மிஸ், சங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சங்கர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அதே கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சாந்தி. இவரது கணவர் பெயர் சந்திரசேகர். சாந்தியின் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்து அந்த சொத்தை அபகரிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு போலியான ஆவணத்தை தயார் செய்து, சங்கர் தனது மகள் சாந்தி மற்றும் மருமகன் சந்திரசேகர் உள்ளிட்டவருக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்தது போன்று போலி ஆவணத்தை சாந்தி தயார் செய்ததாக கூறப்படுகிறது. போலியான ஆவணம் தயார் செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க சாந்தியின் கணவர் சந்திரசேகர், சந்திரசேகரின் மகன் சித்தார்த், கிருஷ்ணசாமி, கொடைக்கானலைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்டோர் உடந்தையாக செயல்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: கன்னியாகுமரி கல்லூரி மாணவன் தற்கொலையில் திருப்பம்.. 'மார்பிங்' புகைப்படங்களை காட்டி ஆன்லைன் கடன் மோசடி கும்பல் மிரட்டியது அம்பலம்!

மேலும், போலி ஆவணம் தயாரிக்க உதவிய ஆவண எழுத்தர்கள் மருதுபாண்டி, கில்பர்ட், போலி ஆவணத்தின் மூலம் பத்திர பதிவு செய்த முன்னாள் சார் பதிவாளர் முருகேசன், ஆவணத்தை தயாரிக்க உதவிய வழக்கறிஞர்கள் சுதாகர், முகமது மைதீன், ராகவேந்திரன், ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த சங்கரின் மனைவி ஜெயந்தியின் பவர் ஏஜென்ட் கோபி, கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றவர்களான சாந்தி மற்றும் அவர்களுக்கு உதவிய 10 நபர் ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சாந்தியை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 10 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! கைதான நபருக்கு கால் முறிவு எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.