ETV Bharat / state

வில்பட்டி இடைத்தேர்தலில் திமுக ஆதரவாளர் வெற்றி - tamilnadu news

கொடைக்கானலில் வில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இடைத்தேர்தலில் 6 சுற்று முடிவுகளில் திமுக ஆதரவு பெற்ற கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட பாக்கியலட்சுமி 4034 வாக்கு பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆதரவாளர் வெற்றி
திமுக ஆதரவாளர் வெற்றி
author img

By

Published : Oct 12, 2021, 8:08 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் வில்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் இடைத்தேர்தலில் 6 சுற்று முடிவுகளில் திமுக ஆதரவு பெற்ற கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட பாக்கியலட்சுமி 4,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று(அக்.12) வாக்கு எண்ணிக்கையானது பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

கொடைக்கானலில் வில்பட்டி ஊராட்சி மன்றத்தலைவருக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது.

இந்நிலையில் காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையானது 6 சுற்றுகளாக நடைபெற்றது.

தொடர்ந்து வில்பட்டி ஊராட்சியில் 26 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் 12,260 வாக்குகளில் 6,846 வாக்குகள் பதிவாகியுள்ளன.

திமுக ஆதரவு பெற்ற கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட 4,034 வாக்குகளும், இவருக்கு எதிராக ஏணி சின்னத்தில் போட்டியிட்ட செல்வராணி 1,720 வாக்குகளும் பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்றத்தேர்தலில் கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட பாக்கியலட்சுமி 2,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

பதிவான மொத்த வாக்குகளில் செல்லாத வாக்குகளாக 186 பதிவானது. இவரின் வெற்றியை திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

இதையும் படிங்க:உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி முன்னிலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.