கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் அன்றாட தேவைகளுக்காக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் நிலையில், அங்கு தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் வருகைக்கு தடை நீடித்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது ஆதார் அட்டையைக் காண்பித்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென கொடைக்கானல் போக்குவரத்து மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றை பயணத்தின்போது பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாறும் - அமைச்சர் எ.வ.வேலு