ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: ஜோதிமணி எம்.பி., ஆய்வு!

author img

By

Published : Aug 18, 2020, 12:36 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுக்காவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எம்.பி. ஜோதிமணி ஆய்வு மேற்கொண்டார்.

வேடசந்தூர் தாலுகாவில் எம்.பி. ஜோதிமணி சுற்றுப்பயணம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்காவில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மல்வார்பட்டி, பண்ணைபுரம், ராஜீவ் காந்தி நகர், மாரம்பாடி, சாமிமுத்தனம்பட்டி, கோட்டை மந்தை உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தாக்கம் குறித்து பொதுமக்களிட்ம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை அவர் வழங்கினார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "தமிழ்நாடு அரசு மக்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அதன் பின்பு ஒன்றுமே தராததால் மக்கள் செய்வதறியாது நிற்கின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும், ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் 6 மாதத்திற்கு வழங்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. இது போன்று பிரச்னைகள் உள்ள சூழ்நிலையில் யார்? முதலமைச்சராக வேண்டும் என்று அதிமுகவினர் சண்டையிட்டுக் கொண்டு இருப்பது மனிதாபிமான அடிப்படையில் இல்லை. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் காலகட்டத்தில் யார்? முதலமைச்சராக வேண்டும் என்று சண்டை வந்தது கிடையாது" என்று கூறினார்.

இதையடுத்து, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பதில் அளித்த ஜோதிமணி, "பாஜக எப்போதும் நோட்டா உடன் தான் போட்டியிடுவார்கள். எங்கேயாவது நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றால் மாவட்ட தலைவருக்கு இனோவா கார் பரிசாக தருவார் போல் தெரிகிறது" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்க்க வேண்டும்'- எம் பி ஜோதிமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.