ETV Bharat / state

Erode East Bypoll: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் - ஜான்பாண்டியன் - பழனி முருகன் கோயில்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனிதனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன், நாளை வெளிவரும் தீர்ப்பின்படி கூட்டணிக் கட்சிகள் கூடி ஆதரவு குறித்து முடிவெடுக்கப்படும் என ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

john pandian said the alliance parties will meet and decide on the candidate for the Erode East constituency
Erode East Bypoll: நாளை வெளிவரும் தீர்ப்பின்படி முடிவெடுக்கப்படும் - ஜான்பாண்டியன்
author img

By

Published : Jan 29, 2023, 10:27 PM IST

Erode East Bypoll: நாளை வெளிவரும் தீர்ப்பின்படி முடிவெடுக்கப்படும் - ஜான்பாண்டியன்

திண்டுக்கல்: ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர்களின் 26-ம் ஆண்டு தைப்பூச முதல் மரியாதை மண்டகப்படி விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நெல்லையிலிருந்து வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனுக்கு கொடைரோடு டோல்கேட் அருகே பாரதிய ஜனதாகட்சி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் இராணி கருப்பசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் வெற்றிச்செல்வம், முத்துரத்தினவேல் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், “வரலாற்று சிறப்புமிக்க 26-ஆண்டு மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த விழாவில் கலந்து கொள்ளும் தேவேந்திரகுல சொந்தங்களை வரவேற்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தமாட்டார்கள் என நம்புகிறேன். நாளை வெளிவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் கூடி ஒருமித்த கருத்துடன் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அந்த நேரத்தில் அறிவிக்கப்படும். பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியினர் ஆதரவோடு நான் தென்காசி தொகுதியில் போட்டியிடுவேன் என ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Kanthuri Festival 2023: 500 கிலோ ஆட்டுக்கறியில் கைமா பிரியாணி - 20ஆயிரம் பேருக்கு விலையில்லாமல் வழங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.