ETV Bharat / state

புனித அந்தோணியார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி - புனித அந்தோணியர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்: புனித அந்தோணியார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்சென்றனர்.

உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி
author img

By

Published : Jan 23, 2020, 9:01 AM IST

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் அமைந்துள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டானது காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை 5 சுற்றுகளாக நடைபெற்றன. இதில் பங்கேற்க திருச்சி, மதுரை, மணப்பாறை, சிவகங்கை, தேனி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் வருகை தந்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகே காளைகளும் மாடுபிடிவீரர்களும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் ஊர் வழக்கப்படி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை போட்டி போட்டு வீரர்கள் பிடித்தனர்.

உலகம்பட்டி ஜல்லிக்கட்டில் திருநங்கை காயம்

வெற்றிபெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் தங்க, வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கபட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் போட்டியை காண சுற்று வட்டாரப்பகுதியிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.

இதில் 15க்கும் மேற்பட்ட மாடிபிடி வீரர்கள் காயமடைந்தனர். குறிப்பாக திருச்சி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த திருநங்கையை அவர் கொண்டு வந்த காளையே எதிர்பாராதவிதமாக முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது - டி. ராஜா

Intro:திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிகட்டு காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 30 மணி அளவில் 5 சுற்றுகளாக 650 காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.Body:திண்டுக்கல் 22.01.2020
எம்.பூபதி செய்தியாளர்.

தாடிக்கொம்பு அருகே ஐந்தாம் ஆண்டு ஜல்லிக்கட்டு பெரும் விமர்ச்சியாக நடை பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிகட்டு காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 30 மணி அளவில் 5 சுற்றுகளாக 650 காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தேனி மதுரை திருச்சி கரூர் ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் கொண்டுவரப்பட்டனர் அதேபோல் தேனி மதுரை திருச்சி கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 100 நபர்கள் விதமாக ஐந்து சுற்றுகளில் 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த வீர தமிழச்சி திருநங்கை அவர்கள் போட்டிக்கு கொண்டுவந்த அவருடைய ஜல்லிக்கட்டு காளை எதிர்பாராதவிதமாக அவரின் இடது காலில் மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைகளை மருத்துவ பரிசோதனை செய்தபிறகு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர் அதேபோல் மாடுபிடி வீரர்கள் முதல் சுற்று ஆரம்பிக்கும் பொழுது உறுதிமொழி ஏற்று பின்னரே மாடு பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். உலகம்பட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.Conclusion:திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.