திண்டுக்கல்லை அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 550 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்கள் ஏராளமான பரிசுகளை கைப்பற்றினர். இதில் குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், பீரோ, நாற்காலி, தலைக்கவசம், மிதிவண்டி, அண்டா, மின்விசிறி, உள்ளிட்ட பரிசு பொருள்கள் விழா குழு சார்பாக வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பாக சீறிப்பாய்ந்த காளைகளுடைய உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காளையை 'வாடிவாசல்' இருந்து அவிழ்த்து விட இருக்கும் வெற்றிமாறன் சூர்யா!