திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரோனா பெருந்தொற்றால் எட்டு நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, அவர்கள் வசித்த மீனாட்சிபுரம், அண்ணா நகர், தர்பார்நகர், ஆசாத் நகர், கோசுகுறிச்சி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்பொழுது அந்த எட்டு நபர்களும் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதுவரை, நத்தம் பகுதியில் புதிய தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை.
ஆதலால், நத்தம் வட்டாட்சியர் இராதாகிருஷ்ணன் தலைமையில், நத்தம் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த 28 தடுப்புகளும் அகற்றப்பட்டன.
இதில் நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், நத்தம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், காவல் துணை ஆய்வாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!