நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசினப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: சீமான் மட்டும்தான் தமிழனா? ராஜேந்திர பாலாஜி அசத்தல் கேள்வி