திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் பொருளியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவின் முப்பது ஆண்டு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் குறித்து பேசப்பட்டது. இந்த கருத்தரங்கிற்கு காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு பேராசிரியர் எம். சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," உலகமயமாக்கல் பன்னாட்டு நிறுவனங்களை நன்றாக மேம்படுத்தியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்கட்டமைப்பு போக்குவரத்து, தொலைதொடர்புகள் நல்ல முன்னேற்றம் கண்டு மக்களின் வாழ்க்கை முறை எளிதாகியுள்ளது" என்றார்.
இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வந்த கர்நாடகாவின் குவேம்பு பல்கலைக்கழக துணைவேந்தரும், பொருளாதார நிபுணருமான பேராசிரியருமான பி.பி. வீர பத்ரப்பா பேசுகையில், " எல்.பி.ஜி.யின் மூலம் இந்திய பொருளாதாரத்தில் நேர் மறை, எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளும் அதன் பயன்களும் ஏழை மக்களை சென்றடையவில்லை. எனவே அரசு திட்டங்கள் ஏழை மக்களுக்குச் சேர வேண்டும்" என்றார்.
இதில், ஓன்பது அமர்வுகளின் கீழ் 220 ஆராய்ச்சியாளர்கள் தங்களது 192 ஆய்வுக் கட்டுரைகளை விவாதித்தனர். மேலும், கருத்தரங்கில் நைஜீரியா, எத்தியோப்பியா, இலங்கை, அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்கள் நாட்டு தாராளமயமாக்கல் , தனியார்மயமாக்கல் உலகமயமாக்கலின் தாக்கங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுரையில் ஒரே ஆண்டில் இத்தனை கிலோ தங்கம் கொள்ளையா? - அதிர்ச்சியளிக்கும் ஆர்டிஐ தகவல்