ETV Bharat / state

சர்தேச சிலம்ப போட்டியில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவி - dindigal sports news

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிலம்பத்தில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

பிரதீபா
author img

By

Published : Oct 20, 2019, 6:14 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் பாண்டி - பத்மாவதி தம்பதி. இவர்களின் மகள் பிரதீபா ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சிலம்பம் கற்று வந்தார். அப்போதுமுதல் சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

தற்போது பிரதீபா உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி பிரதீபா சர்வதேச அளவில் பாரம்பரியமிக்க விளையாட்டான சிலம்பத்தில் தங்கபதக்கம் பெற்று வந்தது இப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலம்ப போட்டியில் சாதித்த ஒட்டசத்திரம் மாணவி பேட்டி

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், விடாமுயற்சியுடன் கடின பயிற்சி எடுத்து உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டு தங்க பதங்கம் பெறுவது தான் கனவு என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:துப்பாக்கிச் சுடுதலில் அட்டகாசம் செய்த 'தல' அஜித்

Intro:திண்டுக்கல். 19.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிலம்பாட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடி முதலாம் இடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்று சாதனை

Body:திண்டுக்கல். 19.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிலம்பாட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடி முதலாம் இடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்று சாதனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த பாண்டி பத்மாவதி இவர்களின் மகள் பிரதீபா இவர் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் படித்து அங்கு சிலம்பாட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போதிலிருந்தே அவர் மாநில அளவில் நடைபெற்ற சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது பிரதீபா உடுமலைப் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு பழனியைச் சேர்ந்த வேங்கைநாதன் என்பவர் சிலம்பாட்ட பயிற்றுநராக இருந்து இவருக்கு விடா முயற்சியாக பயிற்சி அளித்துள்ளார். இந்த மாணவியும் இந்த சிலம்பாட்டத்தில் மிகவும் ஆர்வத்துடனும், திறமையுடனும், விடாமுயற்சியுடனும் விளையாடி கடுமையான முயற்சியுடன் பயிற்சி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 18 வயது மாணவ மாணவிகளுக்கான சிலம்பாட்ட பிரிவில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். அவருடன் பல வீரர்கள் போட்டி போட்டுள்ளனர். இறுதியாக மலேசிய அணியுடன் மோதி வெற்றி பெற்று முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இவர் இந்த தங்கப் பதக்கம் பெற்றது ஒட்டன்சத்திரம் பகுதிக்கும், அவரது பெற்றோருக்கும் அவரது பயிற்றுநறுக்கும் ஆரம்ப காலத்தில் கற்றுக்கொடுத்த கல்வி நிறுவனத்துக்கும் மிகவும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த மாணவி சர்வதேச அளவில் பாரம்பரியமிக்க விளையாட்டான சிலம்பாட்டத்தில் தேர்ச்சி பெற்று விளையாடி தங்கபதக்கம் பெற்று வந்தது இப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்து அடுத்து உலக அளவில் நடைபெறும் போட்டியிலும் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெறுவதற்கு விடா முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இவர் மான்கொம்பு போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி :- பிரதீபா தங்கம் வென்ற மாணவிConclusion:திண்டுக்கல். 19.09.19
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிலம்பாட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடி முதலாம் இடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்று சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.