திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்கோட்டை மலைப் பகுதி அருகே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விளைந்திருக்கும் பயிர்களை உண்பதற்காக இரண்டு காட்டுயானைகள் வந்துள்ளன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வித்தியா தலைமையிலான வன ஊழியர்கள் 20 பேர் இரண்டு காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர்.
ஆனால், காட்டு யானைகள் லக்கையன்கோட்டை விவசாயப் பகுதியை விட்டுச் செல்லாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு வெடி வைத்தும் புகை மூட்டியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானைகள் அங்கிருந்து நகராததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்