ETV Bharat / state

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை

திண்டுக்கல்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

author img

By

Published : Aug 14, 2020, 2:36 PM IST

ரயில்வே பாதுகாப்பு படையினர்
ரயில்வே பாதுகாப்பு படையினர்

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாட்டின் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்நிலைய காவல்துறையினர் இணைந்து வெடிகுண்டு பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள், ரயில் நிலைய நடைமேடை, தண்டவாளம், வாகன நிறுத்தும் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக கலை நிகழ்ச்சிகள் எதுவுமின்றி கொடியேற்றம் மட்டும் நடைபெறவுள்ளது. இதில், காவல்துறையினர் அணிவகுப்பு தகுந்த இடைவெளியுடன் நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.