’மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாள்களாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தற்போது கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். மேலும், வார விடுமுறை காரணமாக தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருவதால், பாதுக்காப்பு பணிகளில் காவல் துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுவாக பார்க்கவேண்டிய இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வெள்ளி நீர்வீழ்ச்சி நுழைவுப் பகுதியில் முன்னதாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:'கரூரில் இதுவரை 43 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கல்!'