திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் காவல் நிலையம் அருகே கடந்த 14 ஆண்டுகளாக அனைத்து பட்டதாரிகளுக்கு இலவச மரத்தடி பயிற்சி நிலையம் என்ற பெயரில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்துகின்றனர். இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து வரும் பட்டதாரிகள் பயின்று வருகின்றனர். குறைந்தபட்சமாக வாராவாரம் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
டிஎன்பிசி மற்றும் தமிழ்நாடு சீருடை ஐடிஐ ஆசிரியர் பயிற்சி வகுப்புகளும் மற்றும் எஸ்ஐ தேர்வுக்கான வகுப்புகள் ஒவ்வொரு வாரக் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு இலவசமாக பயின்ற 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்.
இந்த இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி கட்டணம் என்று எந்த ஒரு கட்டணமும் பெற படுவதில்லை ஆனால் பயிற்சி கட்டணமாக போட்டித் தேர்வில் வென்று அரசு பணிக்கு செல்லும் முன், லஞ்சம் வாங்க மாட்டோம் என்று உறுதி மொழியை மட்டும் பயிற்சி மையத்தில் பெறப்படுவதாக இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் இந்த பயிற்சி மையத்திற்கு பல்வேறு துறையில் அரசுப் பணியில் ஏழு பேர் கொண்ட ஆசிரியர்கள் குழு, வாரம் தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து மாணவர்களுக்கு இலவச பயிற்சியை கற்றுத் தருகின்றனர்.
இங்கு படித்து அரசுப் பணியில் உள்ள இளைய சமுதாயத்தினர் தங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகள் வைத்து பணிபுரிவது. இந்த பயிற்சி மையத்திற்கான பெருமையாகும். அதேபோல் பயிற்சி மையத்தின் நோக்கம் லஞ்சம் இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த இலவச பயிற்சி மையம் நடத்தப்படுவதாக இங்கு வரும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.