ETV Bharat / state

இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றக் கூறிய திருமாவளவனை வன்மையாகக் கண்டிக்கிறேன் - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி - Shaiva Charities Department

தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றக் கூறிய திருமாவளவனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 11, 2022, 10:03 PM IST

திண்டுக்கல்: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி, பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி ஹிந்து விரோத ஆட்சி எனவும், ஹிந்து என்ற வார்த்தையையே உபயோகிக்கக் கூடாது என்று சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி எனவும் தெரிவித்தார்.

மேலும், மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோவில் வழிபாடுகளில் அரசும், அரசு அதிகாரிகளும் தலையிடுவதைக் கண்டிக்கவில்லை. குறிப்பாக, பழனி கோவிலில் பல நூறாண்டுக் காலமாக நடைபெறும் வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் கோவில் அதிகாரிகள் தலையிட்டு அவற்றை அழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலை தொடர்ந்தால் பழனியில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும், திமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுக கட்சிக்காரர்களே காரணமாக இருப்பார்கள். அந்த ஆபத்தை உணர்ந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையைப் பிரித்து சைவ சமய அறநிலையத்துறை மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்று உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திருமாவளவன் சொல்வது போல் அவ்வாறு பிரித்தால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை விட ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ஆவார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை விட்டுக் கொடுக்க திருமாவளவன் சம்மதிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

பழனி முருகன் கோவிலில் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி

இதையும் படிங்க: மரக்கன்றுகளுக்கு இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா - கேக் வெட்டி கொண்டாடிய ஊராட்சி மன்ற தலைவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.