திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேவுள்ள மேளக்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாகவுள்ளார். இவருக்குச் செல்லம்மாள் என்ற மனைவியும் யுவராஜ், வெள்ளியங்கிரி என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவியிடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த செல்லம்மாள், அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவன் பாலன் தலையில் அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த பாலன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் பாலனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொலை