ETV Bharat / state

பழனி வந்து தற்கொலை செய்துகொண்ட கேரள தம்பதியினர்! - பழனி போலீசார் கடன்‌ பிரச்சினையால் கேரள தம்பதியினர் தற்கொலை செய்தது குறித்து விசாரணை

கடன்‌ பிரச்னையால் கேரள தம்பதியினர் பழனியில் தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள தம்பதியினர்
கேரள தம்பதியினர்
author img

By

Published : Jul 2, 2022, 6:45 PM IST

திண்டுக்கல்: பழனிக்கு நேற்று முன்தினம் (ஜூன் 30) கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன்-சத்யபாமா‌ தம்பதியினர் சாமி தரிசனத்திற்கு வந்ததாகக் கூறி, அங்கு தனியார் விடுதியில் அறை பதிவு செய்து தங்கினர். இந்நிலையில் நேற்று (ஜூலை1) நள்ளிரவு அடிவாரம் பகுதியில் அந்த தனியார் விடுதிக்கு கேரளாவைச் சேர்ந்த சிலர் அழுதபடியே வந்தனர்.

இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள கணவன் மனைவியான சுகுமாரன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள்‌ என்றும்; அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பியதோடு, தாங்கள் இருவரும் தற்கொலை செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த‌ விடுதி ஊழியர்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.

மேலும், 'தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை; தாங்கள் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்கிறோம்' என மலையாளத்தில் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன்‌ பிரச்னையால் கேரள தம்பதி இருவரும் பழனியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க: சினிமா பட பாணியில் செயின் பறிப்பு சகோதரர்களை 4 கி.மீ., துரத்திச்சென்று கைது செய்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.