திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி மார்க்கெட் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்.
இந்த மார்க்கெட்டிற்கு பிற மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு தினந்தோறும் நான்கு முதல் ஐந்து கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் இந்த மார்க்கெட்டிற்கு கேரளாவிலிருந்து அதிகப்படியான வியாபாரிகளும், இங்கிருந்து லாரி ஓட்டுனர்கள் அதிகமாக கேரளா சென்று வரக்கூடிய சூழ் நிலை உள்ளது.
ஆகவே கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டு விடும் என்பதற்காக ஒட்டன்சத்திரம் கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக இன்று காலை முதல் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறி சந்தையில் கூடிய பொதுமக்கள்