ETV Bharat / state

'கொடைக்கானலில் சுற்றுலாத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது' - அர்ஜுன் சம்பத் - hindu makkal katchi arjun sambath

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் வனப்பாதுகாப்புச்சட்டம், கட்டட வரன்முறைச் சட்டத்தால் சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

hindu-makkal-katchi-arjun-sambath
author img

By

Published : Oct 21, 2019, 11:24 AM IST

இந்து மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த நிர்வாகக் குழுக்கூட்டத்தில் கொடைக்கானல் தொடர்பான இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் உள்ள மக்களின் வாழ்வு ஆதாரம் சுற்றுலாத் தொழிலை மையமாகக் கொண்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் இங்குள்ள மக்களின் வாழ்வு ஆதாரமாக இல்லை.

ஆனால்,மத்திய மாநில அரசுகள் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் வனப் பாதுகாப்புச் சட்டம் , கட்டட வரன்முறைச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தக்கூடிய காரணத்தினால் சுற்றுலா தொழில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், வளர்ச்சியும் தண்டவாளம் போன்றது. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், ஒட்டு மொத்தமாகத் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பூட்டப்பட்டதால் மக்கள் வாழ்வு ஆதாரத்தினை இழந்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகமும், மத்திய, மாநில அரசுகளும் மக்கள் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த கொடைக்கானல் மக்களின் வாழ்வு ஆதாரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: திண்டுக்கல் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Intro:திண்டுக்கல் 21.10.19

மத்திய மாநில அரசுகளின் அறிவிப்பால் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் மிகவும் மோசமாக் பாதிக்கப்பட்டிருக்கிறது : அர்ஜுன் சம்பத்Body:இந்து மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்துமக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த நிர்வாக குழு கூட்டத்தில் கொடைக்கானல் தொடர்பான இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொழிலை மையமாக கொண்டு இந்த மக்களின் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது. விவசாயம் சார்ந்த தொழில்கள் இங்குள்ள மக்களின் வாழ்வாதரமாக இல்லை. சுற்றுலாதான் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

ஆனால் மத்திய மாநில அரசுகள் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டு வரும் வனப்பாதுகாப்பு சட்டம் , கட்டிட வரன்முறைச்சட்டம் தீவிரமாக அமுல்படுத்தக்கூடிய காரணத்தினால் சுற்றுலா தொழில் மிகவும் மோசமாக் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்பபினை இழந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வளர்ச்சியும் தண்டவாளம் போன்றது. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கவேண்டும். ஆனால் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாக கொடைக்கானல் பகுதி மற்றும் வனப்பகுதி அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் ஒட்டு மொத்தமாக ஹோட்டல்கள், கட்டிடங்கள் பூட்டப்பட்டதால் மக்கள் வாழ்வாதரத்தினை இழந்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் எனவே மாவட்ட நிர்வாகமும், மத்திய மாநில அரசுகளும் மக்கள் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இது சட்டபூர்வமாக தீர்க்ககூடிய நடவடிக்கை இல்லை சட்டமே மக்களுக்காகத்தான், சமீபத்தில் கூட இதற்காக நகராட்சி ஆணையாளரை கண்டித்து போராட்டமும் நடைபெற்றது. எனவே இந்த கொடைக்கானல் மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுகவேண்டும். சுற்றுலாபாதிக்கப்படும் எந்தவித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளக்கூடாது என கூறினார் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.