திண்டுக்கல் மாவட்டம் பிஸ்மி நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பியின் மூலம் மின்சாரம் அருகிலுள்ள ஆலைகளுக்குச் செல்கிறது.
இந்நிலையில் நேற்று கேபிள் வேலை செய்து கொண்டிருந்த பாஸ்கர் என்ற இளைஞர் உயரழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் பகுதி வாயிலாக செல்லும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
மேலும் இந்த உயரழுத்த மின்சார கம்பிகளின் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தங்களுக்கு சம்பந்தமில்லாத உயரழுத்த மின் கம்பிகளால் இன்னும் எத்தனை உயிர்களை நாங்கள் பலி கொடுப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் உயர் மின் கம்பியை அகற்றக்கோரி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ஓமன் நாட்டில் காணாமல் போன மீனவர்கள் - உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!