தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பின் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சீதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அகில இந்திய அளவில் ஓய்வூதியர்களிடம் இருந்து இதுவரை பங்களிப்பாக பிடிக்கப்பட்ட 7 லட்சத்தி 37 ஆயிரத்து 699 கோடி ரூபாய் எங்கே சென்றது என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஓய்வூதியர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று சொல்லி வருகிறார்களே தவிர இதுவரை இறந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கூட அந்த பணத்தை கொடுக்கவில்லை. எனவே, இந்தத் தொகையை 8 விழுக்காடு வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டப்படி பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஓய்வூதியர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு பிடித்தம் செய்த தொகை 30 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு பிடித்தம் செய்த தொகையை வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 'யூ டியூப்பில் விளம்பரம் பார்த்தால் பணம்' - நூதன மோசடியில் ஈடுபட்ட பி.இ., பட்டதாரிகள் கைது!