திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவிலுள்ள பச்சாலக்கவுண்டனூர், வெல்லம்பட்டி, கரட்டுப்பட்டி, கூவக்காபட்டி பகுதிகளில் 40 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்தது.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் போக்குவரத்து வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுமட்டுமின்றி வேடசந்தூருக்குச் செல்வது என்றால் 10 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தது.
இந்நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பாக வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவின் பேரில் புதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட்டு உள்ளது.
தொடர்ந்து புதிய பேருந்தை வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனால், கிராம் மக்கள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து பனிமலை பொது மேலாளர் கணேசன், கிளை மேலாளர் மணிகண்டன் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மாநகரப் பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டாலும் மக்களின் பயன்பாடு குறைவு!