ETV Bharat / state

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி: விவசாயிகளுக்கு அரசு ஊக்கத் தொகை - தோட்டக்கலை துறை

திண்டுக்கல்: இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர்
ஆட்சியர்
author img

By

Published : Sep 29, 2020, 7:26 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசு ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தோட்டக்கலைத் துறையின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2, 500 ரூபாயும், வெண்டை, கத்திரி, தக்காளி, அவரை மற்றும் கொடியில் வளரக்கூடிய காய்கறி வகைகளுக்கு எக்டருக்கு 3, 750 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 2 எக்டர் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதனைப் பெற இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவும் அல்லது விவசாய குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற சம்பந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்த பரப்பு விவரங்கள் மற்றும் வருவாய் ஆவணங்களான சிட்டா, அடங்கல், வயல் புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் உழவன் செயலி, www.tn.hortinet.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன அடையலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.