தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 100க்கும் மேல் பதிவாகிறது.
இதனிடையே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வர்த்தகர்கள் சங்கம் சார்பில் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை 7 நாள்களுக்கு அத்தியாவசியக் கடைகள், மருந்தகங்கள், விவசாயப் பணிகள் உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட அலுவலர்களிடம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் வியாபாரிகள் 100% கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கலையரங்கம் பகுதி, அண்ணா சாலை, ஏரிசாலை, மூஞ்சிக்கல், நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதில் பால், மருந்து கடை உள்ளிட்டவைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காய்கறி சந்தையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை!