திண்டுக்கல்லில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. கொடைக்கானலில் அரசு மருத்துவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.
இதனிடையே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வர்த்தகர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரும் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு அத்தியாவசியக் கடைகள், மருந்தகங்கள், விவசாயப் பணிகள் உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட அலுவலர்களிடம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வர்த்தகர்கள் தாமாகவே முன்வந்து 10 நாள்களுக்கு முழுக் கடையடைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: 119 நாள்களில் சுமார் ரூ.18.5 கோடி அபராதம் வசூல்!