திண்டுக்கல்: மேற்கு மரிய நாதசுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராகேஷ் (26). இவர் அதே பகுதியிலுள்ள செட்டிகுளத்தில் மீன்பிடிக் குத்தகை எடுத்துள்ளார். இவர் நேற்றிரவு (ஜனவரி 2) குளக்கரையில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராகேஷிடம் தகராறு செய்துள்ளனர். திடீரென ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ராகேஷை சுட்டதில் அவரது வலது மார்பில் குண்டு பாய்ந்தது.
உடனே ராகேஷை உடனிருந்த நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் ஆறு இடங்களில் குண்டு துளைத்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளான பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகியோரைக் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் தென்மண்டல ஐஜி அன்பு கூறுகையில், "மாவட்டத்தில் குற்றச் சம்பவம் கட்டுப்படுத்த அதிக அளவில் குண்டாஸ் போடப்பட்டுவருகிறது. மேலும் குற்றங்களைத் தடுப்பதற்குத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குற்றச் சம்பவங்கள் குறைவு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பணம் கொடுக்கவில்லையென்றால் மகளைக் கடத்திவிடுவேன் - கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் மிரட்டல்